ராமதாஸிற்கு பாதுகாப்பை அதிகரித்து தர வேண்டி தலைமைச் செயலாளரிடம் மனு

 
ராமதாஸ்

ஜிகே மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு கொடுத்த சிறிது நேரத்தில் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ அருள் தலைமைச் செயலகத்திற்கு மனு உடன் வந்தார். தலைமை செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து மனுவை கொடுத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் அருள், “பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அவருக்கு அவர் செல்லும் இடங்களிலும், அவர் வீட்டின் முன்பும்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை செயலாளரிடம் வலியுறுத்தி உள்ளோம். தற்போது ஆறு காவலர்கள் மட்டுமே அவரது பாதுகாப்பிற்கு உள்ளனர் அது போதுமானது இல்லை மேலும் கூடுதல் காவலர்களை நியமித்தால் டாக்டர் ராமதாஸின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் இல்லத்திற்கு வெளியில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை கருவியை வைத்து உள்ளே செல்பவர்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தலைமை செயலாளரை சந்தித்த பிறகு உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம் விரைவில் தமிழக டிஜிபி ஐயும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். 

நாகரீகம் இல்லாத தரங்கெட்ட ஒரு கூட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்றுதான் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். டாக்டர் ராமதாசை மிரட்டுபவர்கள் அச்சுறுத்துப் அவர்கள் யார் என்ற கேள்விக்கு அவர்களெல்லாம் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான். பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது டாக்டர் ராமதாஸ் மட்டும் தான் அவர்தான் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். வழக்கறிஞர் பாலு மற்றும் மற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாசு தான் அவருக்கு தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது எங்களை நீக்குவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. டாக்டர் ராமதாஸால் நியமனம் செய்யப்பட்ட ஜிகே மணி சட்டமன்ற குழு தலைவராக தொடர்வார், நான் கொறடாவாக தொடர்வேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வழக்கறிஞர் பாலுவுக்கு எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டோம்” என்றார்.