விஜய் பரப்புரை செய்யும் இடங்களில் மின்சாரத்தை நிறுத்தி வைக்க கோரி மனு
நாகையில் நாளை விஜய் பரப்புரை செய்யும்போது மின்சாரத்தை நிறுத்தி வைக்க கோரி தவெக மாவட்ட செயலாளர் மின்வாரியத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பக தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள மனுவில், “எங்கள் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்கள் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யயுள்ள புத்தூர் அண்ணாசிலை அருகில் வருகை புரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார். இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் தளபதியின் விஜய் அவர்களின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிருத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறு மிகவும் தாம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

