ஈரோட்டில் சீமான் பிரச்சாரம் செய்ய தடை கோரி மனு

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்ய தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரிவினைவாதம் பேசி கலவரத்தை தூண்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை தடை செய்ய வலியுறுத்தி, ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தேர்தல் விளம்பரத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இனம் மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரபு மொழி பேசும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்கள் அல்ல என சிறுபான்மையின மக்கள் மீது வன்மத்தை தூண்டும் வகையில் பேசி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது தலித் சமூகத்தை இழிவுபடுத்துவதன் மூலம் தலித்துகளுக்கு எதிரானவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூகத்தை பொதுவெளியில்  பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டங்களிலும் கொச்சைப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டினர். அதனால் பொது மக்களிடைய பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியினருக்கும், தலித் மக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு கலவரச் சூழல் உருவாகி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில்,  தற்போது மீண்டும் தந்தை பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்  பரப்புரையை வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டும் மக்களிடையே இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி கலவரத்தை தூண்டி விட  சீமான் முயற்சிப்பார் என்றும் இது  அரசியலமைப்புச் சட்டப்படி இது மாபெரும் குற்றம் என்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசியும் தமிழ்நாடு அரசும் மக்களும் உயரிய மரியாதை கொண்டுள்ள தந்தை பெரியார் மீது வீண் அவதூறுகளை பரப்பி தமிழர்களிடைய கலவரத்தை தூண்ட முயற்சிக்கும்  சீமான் மீது உரிய வழக்குகள் பதிவு செய்வதோடு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும்  சீமான்  தேர்தல் பரப்புரையை தடை செய்ய வேண்டுமென ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

இறைதூதரே திமுகவுக்கு ஓட்டு போடாதீங்னு சொன்னாக்கூட முஸ்லீம் கேட்க மாட்டாங்க- சீமான்

இது தொடர்பான மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில்  அளித்தனர். முன்னதாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.