அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க கோரி மனு

 
அன்புமணி நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை அன்புமணி நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை

அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உள்துறை செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் எழுதியுள்ளார்.

அன்புமணி இன்று பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை பணிகள்

பாமக தலைவர் அன்புமணியின் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் ஜூலை 25ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். 100 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் இன்று நான்காவது நாளாக மாலை 4-மணிக்கு திருவள்ளூரில் நடைபெற்றது. 

Image

இந்நிலையில் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உள்துறை செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் எழுதியுள்ளார். கட்சி நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அன்புமணியின் நடைபயணத்தால் கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பமும், மோதலும் ஏற்படுகிறது. ஆகையால் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உள்துறை செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளிதுள்ளார்.