பொங்கல் பரிசு தொகை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரும்பு, வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பொங்கல் பரிசுடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கதொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.