சிக்னல் போஸ்ட் காற்றினால் சாய்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் காற்றினால் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரம், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் நேற்று (26.06.2024) காலை 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றினால் சாய்ந்த விபத்தில் அப்பகுதியில் தள்ளுவண்டியில் இலைகளை ஏற்றிசென்றுகொண்டிருந்த கொடைக்கானல் தெரசா நகரைச் சேர்ந்த திரு.அந்தோணிதாஸ் (வயது 55) த/பெ. எட்வர்ட் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

rr


இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.