குமரி திருவள்ளுவர் சிலையைப் பார்க்க மார்ச் 6-ம் தேதி முதல் அனுமதி

 
Kumari

குமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ரசாயன கலவை பூச்சு பணிக்காக கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு பிறகு வரும் மார்ச் ஆறாம் தேதி முதல் சுற்றுலா படகில் சென்று  சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்படவுள்ளனர். 

திருவள்ளுவர் சிலை

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக குமரியின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருவது குமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுடைய அயன் திருவள்ளுவர் சிலை. இதனை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 2000 ம் ஆண்டு குமரி கடல் நடுவே நிறுவினார். இந்த சிலையை சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பதற்காக உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரகனக்கான சுற்றுலா பயணிகள்  தினந்தோறும் குமரிக்கு வருகை தருவார்கள்.  

இதனிடையே கடலின் நடுவே அமைந்துள்ள  திருவள்ளுவர் சிலையை கடல் உப்பு காற்றில் இருந்து பாதுகாப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூச்சு நடைப்பெறும். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உத்திரவுப்படி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரசாயன கலவை பூச்சு பணிகள் ஆரம்பித்தது. இதில் திருவள்ளுவர் சிலைக்கு இரும்பு கம்பிகளால் சாரங்கள் அமைக்கப்பட்டு காகித கூழ் என பல்வேறு கட்டங்களாக ரசாயன கலவை பூச்சும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வந்தது. 

இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்து  133 அடி உயரமுடைய அயன் திருவள்ளுவர் சிலை தற்பொழுது புது பொழிவுடன் கம்பீரமாக கடல் நடுவே காட்சி அளித்து வருகிறார். இதனையொட்டி ஏழு மாதங்களுக்கு பிறகு வரும் மார்ச் ஆறாம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா படகில் சென்று  திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறார்கள். இதனை சுற்றுலா துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால் புது பொலிவுடன் காணப்படும் அயன் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.