#BREAKING நிஷாந்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ராஜபிரபு அனுமதி வழங்கியுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் களமிறங்கின. பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்களின் உதவியுடன் கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்த், அவருடைய காதலி யூடியூபர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ராஜபிரபு அனுமதி வழங்கியுள்ளார். நிஷாந்தை துன்புறுத்த கூடாது, வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

