த்ரிஷா நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி
Updated: May 12, 2026, 17:43 IST1778587985047
சூர்யா- த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார். இயக்குநராக மட்டுமின்றி வில்லனாகவும் இப்படத்தில் களமிறங்கியுள்ளார் பாலாஜி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மே 14ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு படத்திற்கு, 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு படத்திற்கு வரும் 14, 15 ஆகிய நாட்களில் ஒரு சிறப்புக் காட்சியை (காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள்) திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

