#BREAKING திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே பக்தர்கள் தீபமேற்ற அனுமதி
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று முதல் டிசம்பர் 15 வரை தினமும் காலை 10 முதல் மாலை 4.30 வரை பக்தர்கள் தீபமேற்ற அனுமதி
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதை காண, பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். தீபம் ஏற்றப்பட்டதைக் கண்டதும் பக்தர்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். அந்த நொடியில் மலை உச்சியே பரவசத்தில் மூழ்கியது. பக்தர்கள் "அரோகரா! அரோகரா!" என முழங்க, வாணவேடிக்கைகள் வெடித்து உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பு கொடுத்த CRPF வீரர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று முதல் டிசம்பர் 15 வரை தினமும் காலை 10 முதல் மாலை 4.30 வரை பக்தர்கள் தீபமேற்ற அனுமதி வழங்கபட்டுள்ளது. பக்தர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்ற கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

