தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி!
தமிழ்நாட்டில் 128 இடங்களில் அக்டோபர் 25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அணிவகுப்புக்கு அனுமதி கோரி அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் தொடர்ந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறிவருவதாகவும் நீதிபதி சாடினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக்டோபர் 19-க்குள் இறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்,எதிர்வரும் ஆண்டுகளில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்றத்தை நாடும் நிலையை காவல் துறையினர் ஏற்படுத்த மாட்டார்கள் என உயர்நீதிமன்ற
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

