பெரியார் பல்கலை.,சாதிய ஏற்றத்தாழ்வு - இதுதான் திமுகவின் சமூகநீதியா?

 
ttv

பெரியார் பல்கலை., தேர்வில் சமூகத்தை இழிவு படுத்தும் வகையிலான  கேள்வி அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில்,பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ வரலாறு, முதலாமாண்டு படிப்புக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையிலான  கேள்வி அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதுவும் தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. பாடப்புத்தகங்களிலும், வினாத்தாள்களிலும் அடிக்கடி இப்படி மாணவச் செல்வங்களின் மனதில் சாதி எனும் நஞ்சை விதைக்கும் விதமான பகுதிகள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது. இதனைத் தடுப்பதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.