பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
tn

பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

tn

பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சாதிய பாகுபாட்டினை கண்டு வெகுண்டெழுந்து  சமூக நீதி காத்திட தொடர்ந்து போராடியவர். ஆணும் , பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.  சமூக நீதியை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய்  திகழ்வதற்கு வழிகாட்டியாக இருந்தவர்.  தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதை கொள்கைக்காகவே வாழ்ந்தவர்.  தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றியவர்.

படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெற முடியும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெரியார் . சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை விரட்டிட சுயமரியாதை  இயக்கத்தை தொடங்கினார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சுயமரியாதைக்கு உரிமை உடையவர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.  தமிழினத்தின் எழுச்சிக்காக பாடுபட்டு சுயமரியாதை ,பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை  அடிப்படைக் கொள்கைகளால் இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார் தந்தை பெரியார்.

tn

இந்நிலையில் பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வின் போது அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.