பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் ஸ்டிக்கருடன் வாக்கு சேகரிப்பா?- வைரலாகும் சர்ச்சை புகைப்படம்

 
ச்

பீர் பாட்டிலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்டிக்கருடன் வாக்கு சேகரிப்பா? சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக சபரி ஐங்கரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இந்த நிலையில் மதுபான பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் சபரி ஐயங்கரன், தவெக தலைவர் விஜய் புகைப்படத்துடன் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியகுளம் தொகுதி தவெகவினர் தங்கள் கட்சி வேட்பாளர் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக கூறி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ரஜத் பீடனிடம் புகார் அளித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி தங்கள் கட்சி வேட்பாளர் மீது களங்கம் விளைவித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.