பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் ஐகோர்ட்டில் மனு

 
பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் ஐகோர்ட்டில் மனு 

பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன்பின், சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்த அவர், பாஸ்போர்ட் வழங்கக் கோரி ஆன்லைன் மூலம் 2024ம் ஆண்டு அக்டோபரில் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போலீஸாரால் ஆய்வு செய்யப்பட்டது. 

2 ஆண்டுகள் கடந்தும், தனது விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல், நிலுவையில் வைத்துள்ளதால் அதன்மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.