திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா - திருச்சி மருத்துவமனையில் அனுமதி!

 
mla

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

mla

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரேநாளில்   1, 728 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது  

mla

இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவான பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக எம்எல்ஏ பிரபாகரன் திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.