மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்!

 
மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்!

அங்கன்வாடியில் மகனை சேர்த்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.


பெரம்பலூர் கலெக்டராக இருப்பவர் சரண்யா அறி. இவர் கடந்த மாதம் எசனை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் திடீரென்று சரண்யா அறி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையம் நன்றாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை அங்கன்வாடியில் சேர்ப்பதாக உறுதியளித்தார். அதன்படி சரண்யா அறி தனது 2வது மகனான 2வயது நிரம்பிய ஆத்விக்கை நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூரில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்தார். பணி நிமித்தமாக அந்த பகுதிக்கு சென்ற கலெக்டர் சரண்யா அறி தனது மகன் இருக்கும் அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளை பார்த்தார். மகனை பார்த்ததோடு, மகனின் செயல்பாடு பற்றி அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டறிந்தார்.