தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 2.78 லட்சமாக அதிகரிப்பு- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தனி நபர் வருவாய் அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு ஃ2 குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில திட்டக் குழு அலுவலகத்தில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 முக்கிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் வரலாற்றில் பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்து வெளியிடுவது இது முதல் முறை. தமிழ்நாடு பொருளாதாரம் குறித்து முழு அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் வெளியிட்டார். இந்தியாவில் அதிகமாக கார் உற்பத்தி செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. லெதர், ஜுவுளித்துறை உற்பத்தியிலும் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சாராசரி தனிநபர் வருவாய் ரூ.2.78 லட்சமாக உள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ.1.69 லட்சத்தைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தொடர்ந்து அதிகம். தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகம் செயல்படுத்தப்படுகிறது.
பண வீக்கத்திற்கு முக்கியமான காரணம் காய்கறி விலையேற்றம், தானியங்கள் விலையேற்றைம் முக்கிய காரணிகளாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியில் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. AI தொழில்நுட்பம் வரும் போது சேவை துறை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை கணிக்க முடியாது. தொழில்நுட்பம் மாறும் போது அதற்கு ஏற்றவாறும் நிகழ் நேரத்தில் மாற்றம் செய்வதற்கான அறிக்கை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்தோம். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வினாத்தாள் ஆய்வு மேற்கொள்ப்படும். வினாத்தாள் மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டும், விடைகளை நினைவு படுத்த கூடாது. இது குறித்து உயர்கல்வி மன்றத்திடம் ஆலோசித்துள்ளோம். மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க அவசியம் இல்லை. கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை. மாநிலத்தின் உற்பத்தி மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் வாங்காலம். உற்பத்தி மதிப்பீற்கு கீழேதேன் கடன் வாங்கப்படுகிறது. மூதலீட்டிற்கு செய்யக்கூடிய செலவுகளை கடன் வாங்கிதான் செயல்படுத்த முடியும். மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு கடன் வாங்கி செயல்படுத்தி 30 ஆண்டுகளில் திருப்பி செலுத்த திட்டமுள்ளது. கடன்களை அளவு மீறி வாங்க முடியாது, ஆர்பிஐ விதிகள் படி தான் வாங்க முடியும்.
AI மூலம் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை உலகத்தில் யாராலும் கணிக்க முடியவில்லை. கணினி வந்தபோது பெருமளவில் வேலை இழப்பார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் கணினி வேலை செய்ய வைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டது. ஆனால் AI மூலம் முக்கியமான பணிகளில் வேலையை இழக்க வாய்ப்பு உள்ளது, அது குறித்து வரும் காலங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சரிடம் ஆலோசித்துள்ளோம். வர்த்தக போர், AI வளர்ச்சி போன்ற காரணங்களால் எதிர்கால ஜிடிபி குறித்து இடம்பெறவில்லை. இந்தியாவிலே தமிழ்நாடு தான் அதிக வர்த்தக கடன் கொடுத்து வருகிறது. முக்கியமாக அதிக பெண் தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. காலநிலை மாற்றத்தால் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. தடுப்புகள் அமைத்த சில மாதங்களிலே நிலத்தடி நீரின் தன்மை சீரடைந்துள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் அந்த பகுதியில் முதலீடுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.