தீபாவளி பண்டிகை - கோவில்களில் மக்கள் சாமி தரிசனம்

 
திருத்தணி முருகன் கோயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் மக்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் மக்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
தஞ்சை பெரிய கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  காலை முதலே குடும்பத்தோடு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.