கிளாம்பாக்கத்திலேயே காத்திருக்கும் மக்கள்- போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் காவல்துறையினருடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி பேருந்துகளை ஏற்பாடு செய்து திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீசார் அனுப்பிவருகின்றனர். பேருந்துகள் இருந்தும் போதிய ஓட்டுனர்ம் நடத்துனர் இல்லாததன் காரணமாக பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5000-க்கும் அதிகமான பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில், வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என குற்றசஞ்சாட்டுகின்றனர்.

