மக்களே நோட் பண்ணிக்கோங்க..! இந்த மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது..!

 
bank

அக்டோபர் 2026 வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :

  • அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி): நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • அக்டோபர் 10 (மகாலய அமாவாசை): பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் விடுமுறை.
  • அக்டோபர் 17 (மகா சப்தமி): அகர்தலாவில் மட்டும் விடுமுறை.
  • அக்டோபர் 19 (ஆயுத பூஜை / துர்கா பூஜை / மகா நவமி): சென்னை, அகர்தலா, ஐசால், புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் வங்கிகள் இயங்காது.
  • அக்டோபர் 20 (விஜயதசமி / தசரா): கேங்டாக் மற்றும் இம்பால் தவிர இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் விடுமுறை.
  • அக்டோபர் 21 (விஜயதசமி / துர்கா பூஜை): சென்னைக்கு அடுத்தபடியாக கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, அகர்தலா, கேங்டாக், கவுகாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் விடுமுறை.
  • அக்டோபர் 22 & 23 (துர்கா பூஜை / தசாய்ன்): கேங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
  • அக்டோபர் 26 (லக்ஷ்மி பூஜை / மகரிஷி வால்மீகி ஜெயந்தி): அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை.
  • அக்டோபர் 29 (கர்வா சௌத்): சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • அக்டோபர் 31 (சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி): அகமதாபாத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.வாராந்திர விடுமுறைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
  • பண்டிகை கால விடுமுறைகள் தவிர்த்து, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வழக்கம்போல் வங்கிகள் இயங்காது.