இனி தமிழக மக்கள் ராகுல்காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - அனிதா ராதாகிருஷ்ணன்..!

 
1

திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாகவும் இனி தமிழக மக்கள் ராகுல்காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரை சிங்கப்பூர் போன்று மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் ஆவார்” என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் யார் யாரோ ஆட்சிக்கு வந்துள்ளனர். எதை எதையோ பேசி வருகின்றனர். இன்னும் நான்கு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். தற்போது நடக்கும் ஆட்சியை சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தவெகவில் உள்ள சட்டமன்ற தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு வரட்டும். நானும் ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன் திருச்செந்தூரில் போட்டியிடலாம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்கலாமா?

திமுக ஆட்சியில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கினோம். தவெக ஆட்சிக்கு வந்தால் ரூ. 2,500 தருகிறோம் என்று இல்லாததை வாக்குறுதிகளாக அளித்துள்ளார்கள். அத்துடன் ஆறு சிலிண்டர்களை இலவசமாக தருகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இதை எப்படி தரப்போகிறீர்கள்? மோடியிடம் கேட்டு நைசாக வாங்கி தரப் போகிறார்களா? சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக கட்சி எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவிற்கு அடித்து விரட்டுவோம். அதற்கு திமுகவினர் தயாராக வேண்டும்.