“தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

  ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர், நட்பானவர்கள் என்றும்,  புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது   என்றும்  ஆளுநர் ஆர்.என்.ரவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளர்.  

தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் கொல்லப்பட்டதாகவும்,  தாக்குதல் நடத்தப்படுவதாகவும்   பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. பீஹார் மாநில பாஜகவும், அக்கட்சி நிர்வாகிகளும் இந்த பொய் தகவல்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  இதனால் வட மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் ஆள் பற்றாக்குரை ஏற்பட்டு தொழில்கள் பாதிக்கப்படும் என ஜவுளி, உற்பத்தித் துறை, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கவலை தெரிவித்துள்ளன.

indians
இதனையடுத்து  இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பினால்,  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.   இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.