கோவை மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! கோவை புரோசோன் மாலில் 9-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
கோவை புரோசோன் மால்’ (Prozone Mall) தனது 9-வது ஆண்டு விழாவை We Are Turning #9 என்ற பெயரில் வரும் ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை மக்களுடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மால் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இந்த விழாக்களைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாடிக்கையாளர்களுக்காக வருகிற ஜூலை – 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 100 – க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் மீது அதிகபட்சமாக 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனையும், மேலும் விழா சலுகையாக ரூ.5,999/* – க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500/* மதிப்பும் ரூ.9,999/* – க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000/* மதிப்புள்ள மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட் – ல் ஷாப்பிங் செய்து பொருட்களை அள்ளி செல்லலாம்.
ஆண்டுவிழா கொண்டாட்டதின் சிறப்பம்சமாக வருகிற ஜூலை – 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் பிரம்மாண்ட கேக் கட்டிங் நிகழ்வு, தி பிக்கெஸ்ட் பலூன் டிராப் மற்றும் சாக்லட் சவருடன் லேசர் ஷோ உள்ளிட்ட விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரம்மாண்ட கேக் கட்டிங் நிகழ்வு கோவை மக்கள் முன்னிலையிலும், கோவை மக்களாலும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த மூன்று நாட்களும் நியூஸ் 18 தொலைகாட்சி நடத்தும் தோரணமாயிரம் நிகழ்ச்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் டிஜெ பிளாக் – ன் டி ஜெ கொண்டாட்ட இரவு, ஸ்டிரம்ஸ் என் ஹம்ஸ் சிங் அலோன் என ஏகப்பட்ட கலை நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்கள் தொடர்பாக மால் நிர்வாகம் இந்த 3 நாட்களின் விழாக்கால கொண்டாட்டங்கள் குறிப்பாக கோவை மக்கள் புரோஜோன் மாலோடு இருக்கும் நினைவுகளின் நிமித்தமாகவும் கோவை மக்களின் குடும்ப விழாவாக கொண்டாடப்படும் எனவும், தெரிவித்துள்ளது.

