விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

 
traffic

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வரும் மக்களால் செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாளை மறுநாள் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை தினம் வருவதால் சென்னையில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் ஏராளமான பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்து வருவதால் பேருந்துகளில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். 

மேலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் சரக்கு வாகனங்கள், பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரை ஒருவருக்கு 150-ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.