மக்களே திங்கட்கிழமை கலெக்டர் ஆபிஸ் போகாதீங்க... அரசின் திடீர் அறிவிப்பு!

 
குறைதீர் கூட்டங்கள்

தமிழ்நாட்டில் 600க்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனையொட்டியே கடந்த வியாழக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தியது தமிழ்நாடு அரசு. அதேபோல புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துள்ளது. நாளை முழு ஊரடங்கு அமலாகவிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மற்றபடி எந்த காரணத்தைக் கொண்டும் மக்கள் வரவே கூடாது என அரசு எச்சரித்துள்ளது. 

இச்சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

சேலம் மாவட்டம்: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களின் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற்றது....

தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.