விநாயகர் சதுர்த்தி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வட மாநிலத்தினர்

 
விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநிலத்தினர்

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில்  குவிந்த 1000-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் நிறுவங்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட  கூட்டம் கூட்டமாக மேற்பட்டோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். அதே போல் பீகாரில் சத்து பூஜா  விமரிசையாக கொண்டாடப்பட இருக்கும் சூழலில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வாராந்திர சிறப்பு ரயிலில் செல்வதற்காக திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

வாரம் ஒரு முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரத்தில் சனிக்கிழமை ஒரு மணி அளவில் புறப்பட்டு இரண்டு நாட்கள் பிறகு ஜார்கண்ட் மாநிலம் ஜஷிஸ்டி என்னும் நகரை சென்று அடையும். முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் 7,8 நடைமேடைகளில் குவிந்து இருந்த நிலையில் ரயில் வந்தவுடன் அதில் முட்டி மோதி ஏறினார்கள். இதேபோல் விழாகாலஙகளில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என அவர்கள் கேட்டுகொண்டனர்