மக்களே உஷார்..! பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!
Jan 1, 2025, 06:30 IST1735693255000
![1](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/90a9bf7e9c9a894a12513b736d9c8db9.png)
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இத்தகவலைத் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் இயல்பைவிட 18 சதவீதமும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 33 சதவீதமும் ஆண்டுக்கணக்கில் 28 சதவீதமும் இயல்பைவிடக் கூடுதலாக மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நெல்லை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 23 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பொங்கல்வரை வாய்ப்பு இருப்பதால், வடகிழக்குப் பருவமழையின் விலகல் பற்றி பிறகு அறிவிக்கப்படும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.