மக்களே உஷார்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

 
1

மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், அண்மைக் காலமாக கொசுக்களால் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு அதிகமாக பரவி வருகிறது. பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலங்களில், கொசுக்களின் பெருக்கம் காரணமாக பரவும் அபாயம் அதிகரிக்கிறது. திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் போன்ற சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்குவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது தொடர்பான மாவட்டச் செயல்திட்டம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். தேசிய திட்டத்தின் கீழ் அனைத்து தலையீடுகளும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு நாளும் பின்வரும் அறிகுறிகளுடன் உள்நோயாளிகளின் வரிசை பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல், சொறி கொண்ட கடுமையான காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான என்செபாலிடிஸ், கடுமையான மந்தமான பக்கவாதம், மஞ்சள் காமாலை குறித்தும் தகவல்கள் சேகரிப்பட்டு அந்த அறிக்கை தினசரி IHIP போர்ட்டலில் அப்டேட் செய்யப்படுகிறது.

மருந்துகள், நோய் கண்டறிதல், பூச்சிக்கொல்லிகள், உபகரணங்கள் போன்றவற்றை சரியான முறையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், கொசு உருவாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேகொள்ள வேண்டும், கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் பணியை கிராம பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, நகராட்சி அல்லது மாநகராட்சி வார்டு என தினமும் கணக்கெடுக்கப்படும். மருத்துவமனை சார்ந்த நோய்த்தொற்றைத் தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏடிஸ் லார்வா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் பாதுகாப்பான குடிநீருக்காக குளோரினேஷன் மற்றும் குழாய் கசிவுகளை அவ்வப்போது கண்காணித்தல் உறுதி செய்தல், மாஸ் கிளீனிங் செயல்பாடு, டெங்கு நோய் மேலாண்மைக்குத் தேவையான ரத்தத் தட்டுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள், முழு ரத்தம் போன்றவை மாநிலத்தில் போதுமான அளவில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.