மக்களே உஷார்..! போலி பான் ஆதார் கார்டுகளை உருவாக்கும் ChatGPT..!
Apr 6, 2025, 06:15 IST1743900342000

சாட்ஜிபிடி (ChatGPT) வெளியான நாளில் இருந்தே பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பான கவலைகளை எழுப்பியது. இப்போது அடுத்த கட்ட அபாயத்தைக் கிளப்பி இருக்கிறது.
சாட்ஜிபிடியால் போலியான ஆவணங்களை எளிதாக உருவாக்க முடிகிறது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் போல போலி ஆவணங்களை GPT-4 சுலபமாகத் தயாரித்துவிடுகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்தி போலி ஆவணங்களை எளிதாக உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். சிலர் அத்தகைய போலி ஆவணங்கள் சிலவற்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எச்சரித்துள்ளனர்.
"ChatGPT போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை உடனடியாக உருவாக்குகிறது. இது ஒரு கடுமையான பாதுகாப்பு ஆபத்து. AI தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட அளவிற்காகவது கட்டுப்படுத்த வேண்டும்" என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்