மக்களே உஷார்..!! கோவையிலும் பரவும் பறவைக் காய்ச்சல்..!!
Updated: Nov 28, 2026, 11:41 IST1795846292029
கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் சக்தி சாலையின் ஆம்னி பஸ் நிலையம் அருகே 10க்கும் மேற்பட்ட நாரைகள் உயிரிழந்து கிடந்தன. சந்தேகமடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், நாரைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், உயிரிழந்த நாரைகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்துது உறுதியானது. உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழக - கேரளா எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

