மக்களே உஷார்..!! காய்ச்சல் வந்தால் கவனம்! மருத்துவத்துறை எச்சரிக்கை..!!

 
fever

ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவம் மற்றும் சுகாதார்ததுறையினர் அறிவுறுத்தியுள்ளார்.

குமரிக்கடல், உள்தமிழகம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மீண்டும் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதுடன், மாலை நேரங்களில் பெய்யும் மழையால் இரவில் குளிர் அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது: பருவநிலை மாற்றத்தின்போது காய்ச்சல், சளி, தொண்டைவலி மற்றும் நுரையீரல் தொற்றுகள் அதிகரிப்பது இயல்பு. தற்போது சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து காய்ச்சல்களும் டெங்கு என அச்சப்பட தேவையில்லை. எனினும், காய்ச்சலை அலட்சியப்படுத்தக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.