மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள் - திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி..!
முதலமைச்சரின் ஆணவ பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பழனி ஆண்டவர் கோயில் தெரு பெரம்பூரில் நடைபெற்றது.
ஆர் எஸ் பாரதி கண்டன உரையில், தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பில்லை, மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள். இப்பொழுதுதான் மின் கட்டணத்தை பார்த்து சற்று சொரணை வந்துள்ளது.
திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் ஊரைவிட்டு போகும் அளவிற்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்திருக்கிறார்கள். முன்பு குடிதண்ணீர் வரவில்லை என்றால் உடனடியாக குறைகளை சரி செய்தோம். படகோட்டி படத்தைப் பார்த்து எம்ஜிஆருக்கு ஓட்டு போட்டார்கள்.
அப்போது சில நடவடிக்கையினால் எட்டு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். பெரம்பூர் தொகுதியில் அனைத்து வசதி கொண்ட மிகப் பெரிய திருமண மண்டபம் திமுக ஆட்சியில் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஏசி பேருந்து நிலையம் ஏன் கட்டிக் கொடுத்தீர்கள் ?? தற்பொழுது கஞ்சா போதை ஆசாமிகள் தான் பயன்படுத்துகிறார்கள். பார்த்து பார்த்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வந்தோம்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மூன்று நாள் வாய்தா வாங்கி சென்றார் முதலமைச்சர். மக்கள் செய்த தவறால் ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு மிசா சட்டத்தால் ஸ்டாலின் உள்ளிட்டோர் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் ,பழித்துப் பேசாதீர்கள். சிங்கப்படை அமைத்தவர்கள் பெண் போலீசிடம் சிலிமிஷம் செய்கிறார்கள்.
தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது பாதுகாப்பில்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளும் வெற்றி நமக்கு கிடைக்கும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை தோற்கடித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

