மக்கள் அதிர்ச்சி..! மீன்கள் விலை கடும் உயர்வு..!

 
1

 தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை  61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு குறைந்த ஆழத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் மீன்களின் வரத்து குறைந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ இறால் ரூ.350-லிருந்து ரூ.450-க்கும், கலிங்க முரல் கிலோ ரூ.350-லிருந்து ரூ.500-க்கும், வாடுமுரல் ரூ.260-லிருந்து ரூ.350-க்கும், நண்டு ரூ.350-லிருந்து ரூ.550-க்கும், செங்கனி மீன் ரூ.450- லிருந்து ரூ.550-க்கும், காளை மீன் ரூ.550-லிருந்து ரூ.700-க்கும், கொடுவா மீன் ரூ.550-லிருந்து ரூ.700- க்கும், ஜிலேபி மீன் ரூ.30-லிருந்து ரூ.70-க்கும் விலை உயர்ந்துள்ளது.