மக்கள் ஷாக்..!! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!!

 
Gold

பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிற தங்கம் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது அமெரிக்கா - ஈரான் போரின் காரணமாக சரசரவென குறையத் தொடங்கியது. தற்போது போரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை நிலையின்றி தினந்தோறும் மாறிவருகிறது.

இருப்பினும், உலகளாவிய பொருளாதாரமானது நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்ந்துகொண்டே போவதாலும் முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறும் நோக்கில் தங்கள் முதலீடுகளை பங்குச்சந்தைகளின் பக்கம் திருப்பியுள்ளனர். இதன் காரணமாக தங்கத்தின் விலையானது முன்பு போல கணிசமாக உயராமல் ஒரு கிராம் ரூ. 15 ஆயிரத்துக்கு கீழேயே விற்பனையாகி வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நேற்று (மே 01) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,920க்கும், ஒரு சவரன் ரூ.1,11,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,000க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.