மக்கள் பீதி..! மீண்டும் பரவும் புது வகை கொரோனா! மூடப்படும் பள்ளிகள்..!

 
1 1

மலேசியாவின் பல பகுதிகளில், குறிப்பாக சிலாங்கூரில் மாணவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கின. அவை இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிஏ மற்றும் பி தொற்றுகளின் அறிகுறிகளாகும்.பரவல் மிக வேகமாக இருந்ததால் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட சுகாதார குழுக்களும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் குழுவாக கூடுவதை குறைக்கவும், முக கவசம் அணிவதை ஊக்குவிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மலேசியாவில்  கடந்த வாரம், 14 இன்ஃப்ளூயன்ஸா கிளஸ்ட்டர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அது 97 ஆக உயர்ந்து உள்ளது. இது பெரிய அளவிலான அதிகரிப்பு என மலேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் பள்ளிகள் மற்றும் மழலையர் பயிலும் இடங்களில் கண்டறியப்படுவதால், விரைவாக கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த தொற்றுநோய் பரவல் குறித்து மலேசியா முழுவதும் அச்சத்தில் இருந்தாலும் இந்த புதிய கோவிட் 19 மாறுபாடு XFG, மலேசிய விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் அதிகம் பரவும் தன்மை மற்றும் நோய் எதிர்ப்பிலிருந்து தப்பிக்கும் திறனை சுட்டிக்காட்டி உலக சுகாதார நிறுவனம், XFG ஐ "கண்காணிப்பில் உள்ள மாறுபாடு" என்று வகைப்படுத்தி உள்ளது. ஜூன் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை மாறுபாடு, இப்போது மலேசியாவின் 8% க்கும் அதிகமாக உள்ளது.

வளர்ந்து வரும் மாறுபாடுகளை கண்காணிக்கவும் சாத்தியமான சமூகப் பரவலை கட்டுப்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் மரபணு கண்காணிப்பை தீவர படுத்தியுள்ளனர். covid-19 தொடர்பான மலேசியாவில் முந்தய அனுபவத்தினால் இப்பொழுது அரசு தயார் நிலையை வலுப்படுத்தி உள்ளது என சுகாதார இயக்குனர் ஜெனரல் முகமது அசாம் அஹமத் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு மீண்டும் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான காற்றோட்டம், வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் நெரிசலான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.