தமிழ்நாட்டில் 50 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம்: 2026-ல் விண்ணப்பிப்பது எப்படி?
Feb 10, 2026, 05:50 IST1770682803000
50 வயதைக் கடந்த திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கென பிரத்யேக ஓய்வூதியத் திட்டத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது..வாழ்க்கைத் துணையின்றி, முதுமை காலத்தில் வாழ்வாதாரத்திற்குச் சிரமப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கி, அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விதிமுறைகளை விதித்துள்ளது.
- விண்ணப்பதாரர் கண்டிப்பாக ஆதரவற்ற மற்றும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தகுதியுள்ள பெண்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
- கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு https://www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
- உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.


