பேனா நினைவுச் சின்னம்- சிறப்பு அதிகாரி நியமனம்

 
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி..

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கலைஞர் பேனா நினைவு சின்னம் - ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு  அரசு கடிதம் | Tamilnadu Govt writes to Centre on Kalaignar Pen Memorial -  Tamil Oneindia

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை  ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது. இதனையடுத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்தது. 
   
இந்நிலையில் கலைஞரின் நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நினைவுச் சின்னங்களின் கட்டுமான பணிகளை விஸ்வநாதன் கண்காணிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.