விஜய்க்கு அரசியல் அழுத்தமா? - பவன் கல்யாண் விளக்கம்
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம் தான். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறுவது சரியா? என பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண், “ஜனநாயகன் படத்தின் தணிக்கை பிரச்சனையில் NDA கூட்டணிக்கு தொடர்பில்லை.ஜனநாயகன் படம் தாமதம் ஆனதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சிப்பதோ, குற்றம்சாட்டுவதோ சரியல்ல. என்னுடைய 'OG' படத்திற்கு 'A' சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் முறையிட்டும் சென்சார் போர்டு மறுத்துவிட்டது. சி.பி.ஐ., சென்சார் போர்டு போன்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது . ஜனநாயகன் பட விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியது தவறு. நீதிமன்றத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். NDA அரசை குற்றம்சாட்ட முகாந்திரம் இல்லை” என்றார்.

