திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் வழங்கும் தங்க நகைகள் பாதுகாப்பாக உள்ளதா?- பவன் கல்யாண் சந்தேகம்

 
பவன் கல்யாண்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துக்கள், நகைகள் பாதுகாப்பாக உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் கொலை முயற்சி குற்றச்சாட்டு - ஆந்திரா தேர்தல் பிரச்சாரம்  பரபரப்பு! Pawan Kalyan's attempted murder allegation - Andhra election  campaign is sensational!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கூட்டணி அரசுக்கு உள்ளது. பக்தர்கள் சுவாமி மீது நம்பிக்கை வைத்து சொத்துக்களை தானமாக கொடுத்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தான முந்தைய  அறங்காவலர் குழுவில் அவற்றை மதிப்பற்ற சொத்துகளாக கூறி விற்க முயன்றது. எனவே முந்தைய அரசு தேவஸ்தான சொத்துக்களைப் பாதுகாத்ததா?  கடவுளின் நகைகளைப் பாதுகாத்ததா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏழுமலையான்  மீது  நம்பிக்கையுடன் பக்தர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்தை  அந்த கடவுளுக்கு வழங்கும் பொருட்டு சொத்து பத்திரங்களை  உண்டியில் போடும் பக்தர்கள் பலர் உண்டு. அவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு  ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களிலும் அசையா சொத்துக்களைக் கொண்டுள்ளது.  மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் பல கட்டிடங்கள் உள்ளன. ஆனால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கொடுத்த சொத்துக்களை விற்க முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது.  சுவாமியின் சொத்துக்களைப் பாதுகாப்பதை விட, அவற்றை விற்றுவிடுவதற்கு  அப்போதய குழு ஏன் துடித்தது?  அவர்களை அவ்வாறு வழிநடத்தியது யார்?  என்பதை நாங்கள் அதை வெளியே கொண்டு வருவோம்.

வெங்கடேஸ்வர சுவாமியின் சொத்துக்களை முந்தைய அறங்காவலர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் பாதுகாத்தார்களா?   அவற்றை விற்றார்களா?  என்ற சந்தேகம் வருகிறது. சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை கூட்டணி அரசு ஏற்கும். எனவே இதற்காக தேவஸ்தான சொத்துகள் தொடர்பாக முந்தைய ஆட்சியின்  எடுத்த முடிவுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு  முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட  குழு தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை ஏலம் மூலம் விற்க முடிவு செய்து, அவற்றின் மதிப்பு ₹.23.92 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. பயன்படாத சொத்துகளை விற்று ரூ.100 கோடி வருமானம் ஈட்ட முயற்சித்துள்ளது. அவ்வாறு  குண்டூரில் ஒரு கட்டிடம், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஹயத்நகர் மண்டலத்தின் அம்பர்பேட்டா கலான் பகுதியில் உள்ள நிலம், மல்காஜிகிரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூரு,  நாந்தேட்டில் சில சொத்துக்கள் விற்பனை செய்ய முயன்றதாக துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.