“முருகனின் அவதாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்... இந்துக்களை சீண்டி பார்க்காதீங்க”- பவன் கல்யாண்
உலகின் முதல் புரட்சித் தலைவராக முருக பெருமான் விளங்கினார் என மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உரையாற்றினார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், “ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார். இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமதிக்காதீர்கள். முருகர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் திகழ்கிறார். நிறத்தில் பேதம் இல்லை, அகத்தின் வழியே பார்க்கிறோம் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தது மதுரையில்தான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றியின் படிக்கட்டு அன்பு. நாச சக்திகளை கிள்ளி எறிய வேண்டும். இந்துக்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசுகின்றனர். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம், இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்கு பிரச்சனை. நம்மை இணைக்கும் முருகனை சீண்டிப் பார்க்கிறார்கள்.
என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரையில் தந்தையாகிய சிவனும் தாயாகிய பார்வதியும் மகனான முருகனும் உள்ளனர். முருகனின் அவதாரமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளார் என மக்கள் கருதுகின்றனர். அவர் சிலையருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவர் வடிவில் மனிதன் உருவில் முருகன் வாழ்ந்தார். ஒரு காலத்தில் மதுரை இருளில் மூழ்கிக் கிடந்தது. மீனாட்சி அம்மன் கோவில் விளக்கேற்றப்படாமல் இருண்டு இருந்தது. குமரி முதல் காஷ்மீர் வரை இந்து மதம் ஆழமாக வேரூன்றி உள்ளது. உலகின் முதல் புரட்சித் தலைவராக முருக பெருமான் விளங்கினார்” என்றார்.


