சனாதன பேச்சு விவகாரம் - அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

 
udhayanidhi

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா சிறப்பு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை  ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். உதயநிதியின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் உள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில், சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா சிறப்பு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த பாட்னா சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.