ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்

 
Train

தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் ஆத்திரமடைந்து ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில் தினமும் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30மணிக்கு  புறப்படுகிறது.  இந்த ரயில செங்கல்பட்டு தாம்பரம் விழுப்புரம் வழியாக நாகர்கோவில் செல்கிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் போதே முன்பதிவு செய்த  B-1 ரயில் பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. அதனால் பயணிகள் இது குறித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

அப்போது செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு ரயில் செல்வதற்குள் ஏசி சரி செய்யப்படும் என கூறியுள்ளனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த பிறகும் ஏசியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள் செங்கல்பட்டில் ரயில் புறப்படும் போது அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மேலும், செங்கல்பட்டு ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தற்காலிகமாக ஏசியின் பழுதை நீக்கிய பின் 40 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.