உயிரை கையில் பிடித்தபடி அலறிய பயணிகள்!" – குறுகிய சர்வீஸ் சாலையில் நேருக்கு நேர் மோதிய பேருந்து - லாரி

 
1

வடக்கஞ்சேரி அருகே குறுகிய சர்வீஸ் சாலையின் இடதுபுறம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்ததால், வழிவிட முடியாமல் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

வடக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கம் சந்திப்பு (Thankam Junction) அருகே உள்ள சர்வீஸ் சாலையில் காலை சுமார் 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. கண்ணம்பிரா (Kannambra) பகுதியிலிருந்து வடக்கஞ்சேரி நகருக்குள் சர்வீஸ் சாலை வழியாகத் தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் வழிவிட முடியாமல் இந்த மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேருந்து மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி நின்றது

இந்த விபத்தில் பேருந்து பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் உட்படச் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . காயமடைந்த அனைவரும் இரட்டக்குளம் (Erattakulam) பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.