பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவில் ஆர்வம் காட்டாத பயணிகள்

 
train train

பொங்கல் பண்டிகைக்கான ரயில்களில் சிறப்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

train


பொங்கல் பண்டிகைக்காக தென்னக ரயில்வே நாகர்கோவில் தாம்பரம் செங்கல்பட்டு நெல்லை எழும்பூர் சென்னை சென்ட்ரல் கோவை மங்களூர் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 8 தேதி முதல் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற இயக்கப்படுவதற்கான அறிவிப்பு அந்த நிலையில் அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

நாகர்கோவில் - தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் எனவும், மறுமார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே வரும் வரும் 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - நெல்லை அதிவிரைவு ரயில் 9, 16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் எனவும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நெல்லை - எழும்பூர் அதிவிரைவு ரயில் வரும் 8ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும், மறுமார்க்கத்தில் வரும் 9ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கும் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளது அதேபோன்று நேரடியாக வந்து சென்னை எழும்பூர் முன்பதிவு அலுவலகத்தில் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக வெறிச்சோடி காணப்பட்டது.பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவை செய்ததால் முன்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரயில்களில் 3a மட்டும் இருப்பதால் அந்த ரயில்களில் டிக்கெட் காலியாகாமல் அப்படியே உள்ளது.

பேட்டி உள்ளது