நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் தரப்பட்ட உணவில் வண்டு- பயணிகள் புகார்

 
s

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் தரப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சொகுசு ரயிலில் பயண கட்டணமும் அதிகம் அதே நேரத்தில் உணவுக்காக வசூலிக்கப்படும் தொகையும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்நிலையில் இன்று  நெல்லையைச் சார்ந்த முருகன் மற்றும் சுடலை கண்ணு ஆகிய இருவர் நெல்லையிலிருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை பயணம் செய்து வருகின்றனர் இவர்களுக்கு சற்று முன் வழங்கப்பட்ட உணவு இட்லி  சாம்பாரில் பல வண்டு கடந்துள்ளது.

pt desk

இது குறித்து புகார் தெரிவித்து உணவு கொடுக்கும் ஊழியர்களை வரவழைத்து விசாரித்து புகார் செய்துள்ளனர். ஆனால் இது சாம்பாரில் போடும் சீரகம் என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து சக பயணிகள் அதை வண்டியென உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சென்று விட்டதாகவும் பயணிகள் புகார் அளித்தனர். மேலும் இதை பெரிது படுத்த வேண்டாம் என்றும், இனி சரி செய்வதாகவும் ஊழியர்கள் தெரிவித்து சென்றுள்ளனர். வண்டு கடந்த சாம்பாருக்கு பதிலாக மாற்று சாம்பாரும் வழங்கவில்லை, இதே உணவைத்தான் ரயிலில் பயணிக்க கூடிய அனைவரும் சாப்பிட்டு உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.