போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “சொந்த ஊருக்கு செல்ல வழியின்றி தவிக்கும் மக்களுக்கு முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்” என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணி, “தனியாருக்கு உதவ அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்குக் கூட தட்டுப்பாட்டை உருவாக்கியது மட்டுமில்லாமல், பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும் ஆம்னி பேருந்து மாஃபியாக்களிடம் 'Party Fund' வாங்கிக்கொண்டு வாய மூடி வேடிக்கை பார்க்கிறது தவெக! இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

