த.வெ.க முதலாம் ஆண்டு விழா- பாஸ் விநியோகிக்கும் பணி தீவிரம்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்களுக்கு பாஸ் விநியோகம் தொடங்கியது.
தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரங்கினுள் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக முதலாம் ஆண்டு விழா இன்னும் சிறிது நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்விற்கு நுழைவு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கட்சியின் தலைமை நிலைய அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கினார். வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு சுமார் 2000-க்கும் அதிகமான பாஸ் வழங்கப்பட்டுள்ளன.