தயாராக இருக்கும் தவெக கட்சிக் கொடிகள்.. ‘தி கோட்’ ரிலீஸுக்கு வெயிட்டிங்.. காத்திருக்கும் முக்கிய அறிவிப்புகள்..
‘தி கோட்’ திரைப்படம் வெளியான பிறகே, தமிழக வெற்றி கழகத்திற்கு கொடி மற்றும் மாநாடு தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கின ஆனால் வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார் அதற்கு முன்பாக எந்த தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருந்தார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கட்சியின் கொடி சின்னம் குறித்து அறிவிக்கப்படவில்லைஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குவது, நலத்திட்டப் பணிகளை செய்வது என அரசியல் முன்னெடுப்புகளை திவீரமாக செய்துவருகிறார் விஜய்.
அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்படி முதல் மாநாடு சேலத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. கடந்த 2 நாட்கலாக தவெக முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த மனுவில் மாநாட்டிற்கான தேதி குறிப்பிடாமல் கடிதம் வழங்கியதால், தேதி குறிப்பிட்டு கடிதம் வழங்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியதாகம் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி 3 விதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த கொடியை பயன்படுத்துவது என்பது குறித்து விஜய் முடிவெடுப்பார் என்றும், ஆனால் தவெக குறித்த அறிவிப்புகள் அனைத்துமே செப்டம்பர் 5ம் தேதி‘தி கோட்’ படம் வெளியான பிறகுதான் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதுவரை கட்சி தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.