அன்புமணியை மீண்டும் பாமக தலைவராக அறிவிக்ககோரி ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி ராமதாசை மீண்டும் பாமக தலைவராக அறிவிக்ககோரி ராமதாசுடன் குடும்ப உறுப்பினர்கள் காந்தி, கவிதா, பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாமக கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தலை கருத்தில் கொண்டு பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கிவிட்டு அக்கட்சியின் நிறுவனர் என்ற முறையில் தன்னை தானே பாமகவின் தலைவராக ராமதாஸ் அறிவித்துகொண்டு அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என அறிவித்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமாக கட்சியின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாமகவினர் திண்டிவனத்தில் அன்புமணியை தலைவராக்க வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் மீண்டும் அன்புமணி ராமதாசை தலைவராக நியமிக்க கோரி ராமதாசின் குடும்ப உறுப்பினரும் மகளுமான காந்தி, கவிதா மற்றும் பாமக பொருளாளர் திலகபாமா, மயிலம் பாமக எம்.எல் ஏ சிவக்குமார், தலைமைநிலை செயலாளர் அன்பழகன்,பாமக வழக்கறிஞர் பாலு, முன்னாள் பாமக எம் பி செந்தில்குமார், ராமதாசிடம் சமாதானம் பேச தைலாபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்து மீண்டும் அன்புமணியை தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ராமதாசிடம் பேசி வருகின்றனர்.